2026 ஜூன் 24–
2026 நவம்பர் 8
திறப்பு புதன்கிழமை–ஞாயிற்றுக்கிழமை
காலை 10.30 மணி–மாலை 5.30 மணி
நுழைவு இலவசம்
The Bawa Space,
42/1, ஹோர்ட்டன் ப்ளேஸ், கொழும்பு 07
எழுத்தழகு, இலங்கையின் எழுத்து வடிவங்களின் தோற்றங்களையும், வரலாற்றையும், அவற்றின் எதிர்காலத்தையும் கண்டறிந்து வியக்கும் ஒரு கண்காட்சியாகும். கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மூநியக் எழுத்துருக் கலையகம் நெறிப்படுத்தும் இந்த ‘ஊடாடல் கண்காட்சி’ (Interactive Exhibition), இலங்கையின் தமிழ், சிங்கள, லத்தீன்/ஆங்கில எழுத்துருக்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்சிப்படுத்துகின்றது.
மற்றவர்களுடன் தொடர்பாடுதலும், பிறரால் புரிந்து கொள்ளப்படுதலுமே மனித வாழ்வின் மையப்புள்ளியாக விளங்குகிறது. இன்றைய நவீன வாழ்வில், நாம் எவ்வாறு உழைக்கிறோம், வாழ்கிறோம், மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதற்கெல்லாம் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளே (digital infrastructure) அடித்தளமாக அமைந்துள்ளன. உலகளாவிய டிஜிட்டல் தளங்களைக் கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் உரையாடல்களுக்கான களங்களாகவே 'எழுத்தழகு' உற்றுநோக்குகிறது. அத்தளங்களில், ஒரு மொழியின் வாசிப்புத்திறன் (legibility) குறித்து எடுக்கப்படும் முடிவுகள்தான் யார் சமூகத்தில் அடையாளப்படுத்தப் படுகிறார்கள், யாருடைய குரல் கேட்கப்படுகிறது மற்றும் யாருடைய மொழி நிலைத்து வாழ்கிறது என்பதில் மிக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
எழுத்துருக் கலை, வடிவமைப்பு, கலாச்சாரம், அடையாளம் என்னும் பரிமாணங்களில் ஒரு தசாப்த காலமாகப் பயணிக்கும் மூநியக், தனது கன்னிக் கண்காட்சியான ‘எழுத்தழகு’ மூலம் தமது எழுத்துரு, ஆவண மற்றும் மென்பொருள் கட்டுமானப் பயணங்களில் தன் நேயர்களையும் பங்கு கொள்ள அழைக்கிறது.
எழுத்துருக் கலை, வடிவமைப்பு, கலாச்சாரம், அடையாளம் என்னும் பரிமாணங்களில் ஒரு தசாப்த காலமாகப் பயணிக்கும் மூநியக், கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் எழுத்துரு மற்றும் வடிவமைப்புக் கலையகமாகும். உலகளாவிய பார்வையையும் உள்ளூர் வேர்களையம் ஒன்றிணைத்து இயங்கும் ‘மூநியக்’, இலங்கையர்களுக்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பன்மொழி எழுத்துருக்களையும் எழுத்துருக் கலைப் படைப்பக்களயும் உருவாக்குவதில் தனித்துவம் பெற்று விளங்குகிறது. முழுநேரப் பணியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து இணையும் பங்களிப்பாளர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவாகச் செயல்படும் இவர்கள், எழுத்துவடிவங்களை நேசிப்பவர்களைக் (letterform lovers) கொண்ட ஒரு துடிப்பான சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் காட்சி அடையாளத்தின் (visual identity) தரத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதிலும் பெருமிதம் கொள்கின்றனர். மூனியக்கின் பெரும்பாலான படைப்புகள் கட்டற்ற/திறந்த மூல உரிமங்களின் (Libre/Open source licenses) கீழ் வெளியிடப்படுகின்றன.
Exhibition Team
Curators Pathum Egodawatta, Kosala Senevirathne, and Rajitha Manamperi
Exhibition design Ibraheem Wazil, Kosala Senevirathne, Rajitha Manamperi, and Thilini Perera
Exhibition manager Sareena Hussain
Exhibition, production and management
Geoffrey Bawa Trust
Aneesha Mustachi, Faazath Uvais, Micheal George, Nasla Yoosuf, Raeesah Samsudeen, Shameema Hassan, Shanika Perera, Sujeewa Bandara
Mooniak
Prabhashana Hasthidhara
Albion press restoration Sajaan Peiris
Software development and digital interfaces Pathum Egodawatta, Rajitha Manamperi with Leafycode International
Writers and translations Katie Jacobs, Damith Welikala, King Rutnam, Rachintha Jayawardhana, Varuon Thushyanthan, Pathum Egodawatta
Installation Align Works, Anim8, Kamal Sanjiwal, La Creations, Yashara Wickramasurendra, Signboard Lanka Pvt Ltd
Mural and sign painting Colombo Wall with Kavindu Abeysundera
Collaborators and contributors W A Silva Museum, Sri Siddhartha Palm Leaf Manuscript Study & Research Institute, Typotheque, Nadun Edirisinghe