பொதுக் கொள்கைப் பிரிவு என்பது, கட்டமைக்கப்பட்ட சூழலின் வடிவமைப்பை சாத்தியமாக்கும் தேசிய மற்றும் மாகாண மற்றும் உள்ளூராட்சிச் சட்டங்கள், தேசிய கொள்கைகள், ஒழுங்குமுறைகள், செயற் திட்டங்கள், கட்டமைப்புகள் மற்றும் எந்தவொரு பொதுக் கொள்கைத் தீர்வுகளின் விண்ணப்பங்களையும் வரவேற்கிறது.
ஜெஃப்ரி பாவா மூனமல் விருது
பொதுக் கொள்கை
விடயப் பரப்பு
மூனமல் பொதுக் கொள்கை விருது, மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சகவாழ்வை ஊக்குவிக்கும் வடிவமைப்பைச் சாத்தியமாக்கும் கொள்கையின் திறனைக் கொண்டாடும் வகையில், மிக அகன்ற பரிமாணத்தில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்க முயலும். தேசிய, பிராந்திய அல்லது உள்ளூர் என எந்தவொரு தாக்க வரம்பைக் கொண்ட கொள்கைகளையும் சமர்ப்பிக்கலாம். தேசிய மற்றும் மாகாண மற்றும் உள்ளூராட்சிச் சட்டங்கள் சட்டங்கள், திட்டங்கள், உத்திகள் மற்றும் செயல் வழிகாட்டிகள் உட்பட எந்தவொரு மட்டத்தில் அல்லது அளவுகோலில் வடிவமைப்பைப் பாதிக்கும் பொதுக் கொள்கைகள் பரிசீலிக்கப்படலாம். சூழலியல் வடிவமைப்பிற்கான ஊக்கத்தொகை வழங்குபவை, சூழலியல் கொள்கைகளுக்கு இணங்க வடிவமைப்பை ஒழுங்குபடுத்துபவை அல்லது விருதின் முக்கிய கொள்கைகளை விளக்கும் வடிவமைப்புக்கான கட்டமைப்புகளை வரையறுப்பவை உள்ளிட்ட பல்வேறு தாக்க வகைகளைக் கொண்ட கொள்கைச் சமர்ப்பிப்புக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். பரிசீலிக்கப்படும் திட்டங்களுக்கு இலங்கைக்குள் திட்ட வகை, அளவு, செலவு அல்லது இருப்பிடம் தொடர்பான எந்தவிதமான வரம்புகளும் இல்லை.
தகுதி
சூழலியல் சகவாழ்வை எளிதாக்கும் வடிவமைப்பைப் பாதிக்கும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் இலங்கையிலுள்ள தேசிய மற்றும் துணை-தேசியச் சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள், உத்திகள், செயல் வழிகாட்டிகள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள் (எளிமையான குறிப்புக்காக இனிமேல் "கொள்கை" என அழைக்கப்படும்) பரிசீலனைக்குத் தகுதியானவையாகும்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும், அவற்றின் அளவு அல்லது துறை எதுவாக இருந்தாலும், மூனமல் விருதின் முக்கிய வடிவமைப்பு நெறிமுறைகளுடன் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள ஈடுாட்டைக் காட்ட வேண்டும்.
கொள்கைத் தீர்வுகள் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கும் இடையில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைக்கு வந்த கொள்கைகள் பரிசீலனைக்குத் தகுதியற்றவை.
விண்ணப்பங்கள் அக்கொள்கைக்குப் பொறுப்பான முதன்மை நிறுவனத்தின் /(நிறுவனங்களின்) உறுப்பினர்களால் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் அறங்காவலர் அல்லது ஊழியர் எவரும், வழிகாட்டல் குழுவின் அல்லது விருதின் நடுவர்கள் எவரும், அல்லது தொழில்நுட்ப மதிப்பாய்வுக் குழுவின் எவரும் தங்களது சொந்தப் படைப்பையோ அல்லது தங்கள் நிறுவனத்தின் படைப்பையோ சமர்ப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் முறை
அனைத்துச் சமர்ப்பிப்புகளும் இணையவழிச் சமர்ப்பிப்புப் புறையத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். கொள்கையின் வடிவமைப்பு, நடைமுறைப்படுத்தல் மற்றும் செயற்திறன் ஆகியவற்றைத் தரம் பிரித்துக் காட்டும் துணைக் குறிப்புகளுடன் விண்ணப்பப் படிவமொன்றைச் சமர்ப்பிப்பதும் இதில் அடங்கும்.
இணையவழியில் சமர்ப்பிப்பது சாத்தியமில்லையெனில், நேரடிச் சமர்ப்பிப்பினை மேற்கொள்வதற்காக awards@geoffreybawa.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விருதுப் பிரிவினரைத் தொடர்புகொள்ளவும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன், கீழே உள்ள விண்ணப்ப வழிகாட்டுதல்களைப் பார்க்கவும். இந்த விருதற்காக பல திட்டங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு கொள்கையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு துணைப் பொருட்களும் விருதுக் காப்பகத்தில் தக்கவைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மதிப்பிடல் நடைமுறை
ஆரம்பச் சமர்ப்பிப்புகள் நடுவர்களால் குறுகிய பட்டியலிடப்படும் (shortlisted).
அனைத்துத் திட்டங்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்குவதற்கும், அவற்றை மதிப்பாய்வு செய்யும் நடுவர் மன்றத்தின் பணியை எளிதாக்குவதற்கும், ஒவ்வொரு திட்டமும் ஒரு சீரான வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது. ஜெஃப்ரி பாவா மூனமல் விருதின் பணியாளர்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமிருந்தும் கோரப்பட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து விளக்கக்காட்சிப் பகுப்புகளை (presentation portfolios) ஒன்றிணைப்பார்கள். விருதுப் பணியாளர்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஆராய்ந்து படிப்பதுடன், மேலதிகப் பொருட்களுக்காக விண்ணப்பதாரர்களைத் தொடர்புகொள்ளலாம்.
குறுகிய பட்டியலிடப்பட்ட உள்ளீடுகள் டிஜிட்டல் மற்றும் பிற ஊடகங்களில் வெளியிடப்படும்.
குறுகிய பட்டியலிடப்பட்ட உள்ளீடுகளின் மதிப்பாய்வு, மதிப்பாய்வுக் குழுவால் நடத்தப்பட்டு, இறுதி மதிப்பிடல் தீர்ப்புக்கு முன் நடுவர் மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு நடுவர்கள் தங்கள் இறுதி முடிவை எடுப்பார்கள், அது 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும். நடுவர்களின் முடிவே இறுதியானது.
மூனமல் விருதிக்கான விண்ணப்பப் படிவம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கொள்கை விவரங்கள், கொள்கைத் தாக்கம், துணைப் பொருட்கள், ஒரு பிரகடனம். இந்த விண்ணப்ப வழிகாட்டியானது ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு கண்ணோட்டத்தை வழங்குவதோடு, இணையவழி விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து விவரங்களும் சரியாக உள்ளிடப்படுவதை உறுதி செய்வதற்காக, இணையவழி விண்ணப்பத்தை நிறைவு செய்வதற்கு முன்பு இந்த வழிகாட்டியை கவனமாகப் படிக்கவும்.